சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாஜக மாநில துணை தலைவர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கூட்டணியை யாருடனும் யாரும் வைத்து கொள் ளலாம். அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பன், நிரந்தர எதிரி என்று கிடையாது. தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து உள்ளது. விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து இருக்காது. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து கொள்வது அவர்களது இஷ்டம்.
தேர்தல் நேரத்தில் நிறைய பணப்பட்டுவாடா நடக்கிறது. இலவசங்களை கொடுத்து மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்பு வரும் வரை கூட்டணிகள் முடிவாகாது. இவ்வாறு அவர் கூறினார்.