அரசியல் களம்

அதிமுகவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் இணைய விருப்பம்: எஸ்.பி. வேலுமணி சொல்கிறார்

நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர் என்று எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை மாவட்டம் சித்தநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர். ஆனால் அரசியல் என்பது வேறு. ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ஒன்று வெளியாக முடியா மல் பெரும் சிக்கலில் இருந்தபோது, எனது இல்லத்தில் தங்கி இருந்தார். நான்தான் அவரை நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் அழைத்து சென்று பேசி, அந்த திரைப்படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கே எம்.ஜி.ஆர்.தான் முக்கிய காரணம். தற்போது தி.மு.க.வில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து வேறு கட்சிக்கு சென்றவர்கள் தற்போது அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் அ.தி.மு.க.விற்கே வர தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT