அரசியல் களம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்? - டிடிவி தினகரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவது தமிழ்நாட்டிற்கு நல்லது என்று டிடிவி தினகரன் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் வருவது சிறப்பான விஷயம். கூட்டணி மேலும் வலுப்பெற வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரே கொள்கை இருக்கும் கட்சிகள்தான் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதில்லை. காங்கிரசும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியில் சேரவில்லையா?. கூட்டணி பலமாக வேண்டும் என்பது எனது விருப்பம்; மற்ற விஷயங்களை தலைவர்கள் பார்த்துக்கொள்வார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.

தேர்தல் நேர கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வர வேண்டும்; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீடு நடைபெறும். தொகுதி பங்கீடு குறித்து பாஜகவும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வர்; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT