அரசியல் களம்

காரைக்குடி பிரசாரத்துக்கு செல்லும் வழியில் திடீரென சைக்கிள் ஓட்டிய விஜய்

விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.

காரைக்குடி,

தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வேனில் பயணித்தபடி ரோடு ஷோவாக வந்தார்.

மதுரையில் இருந்து காரைக்குடிக்கு 1.30 மணி நேரத்தில் வந்துவிடலாம் என்ற போதிலும், வழி நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியதால் விஜய் வந்து சேர தாமதமானது. 2.30 மணி வரை மட்டுமே காரைக்குடி கண்ணதாசன் நகர் பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக விஜய் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.

விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். இதற்கிடையில், காரைக்குடி நகருக்குள் நுழைந்ததும் விஜய் திடீரென வேனில் இருந்து இறங்கி சைக்கிள் ஓட்டினார். தொண்டர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் சைக்கிளில் தடுமாறிய விஜய், பின்னர் மீண்டும் பிரசார வேனுக்கே சென்று ரோடு ஷோவாக தனது பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார்.