அரசியல் களம்

சட்டசபை தேர்தலில் களமிறங்கும் சினிமா பிரபலங்கள் யார்-யார்?

இந்த தேர்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் உள்பட சினிமா பின்னணி கொண்ட பலரும் களம் காண்கிறார்கள்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் உள்பட சினிமா பின்னணி கொண்ட பலரும் களம் காண்கிறார்கள். இது பற்றியவிவரங்கள் பின்வருமாறு:

* பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி

* நாம் தமிழர் கட்சியின் சீமான் காரைக்குடியில் போட்டியிடுகிறார். அக்கட்சி சார்பில் இயக்குனர் களஞ்சியம் ஆயிரம் விளக்கில் போட்டியிடுகிறார்.

* நடிகர் இயக்குனர் சுந்தர் சி - புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டி

* நடிகர் ஸ்ரீநாத்: தவெக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

* நடிகர் கருணாஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உதய சூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடுவார் எனத்தெரிகிறது.

*மன்சூர் அலி கான் தனது இந்திய ஜனநாயக புலிகள் சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT