செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்

கண்ணமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம் நேற்று சங்க தலைவர் பூங்கொடி திருமால் தலைமையில் கண்ணமங்கலத்தில் நடந்தது. சங்க துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் குருநாதன் வரவேற்றார். சங்க இயக்குனர்கள் பாஞ்சாலி, புஷ்பராஜ், பணியாளர்கள் பாலசந்தர், வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சங்க துணை விதி 3ல் 10வது இனமாக கல்வி, சுகாதாரம், விளை பொருட்களை பதனிடுதல், சுற்றுலா உள்பட உறுப்பினர்கள் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் சேர்ப்பது, சங்கப் பணியாளர்களின் கல்வித்தகுதியில் திருத்தம் செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு கிசான் கார்டுகள் வழங்கப்பட்டது. முடிவில் நகை மதிப்பீட்டாளர் சண்முகம் நன்றி கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை