செய்திகள்

தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறுங்கள் கொரோனா ஒழிந்து விடும் - பிரக்யா சிங் தாகூர்

தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறுங்கள் கொரோனா ஒழிந்து விடும் என்று பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,


ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தினமும் 5 அனுமன் மந்திரம் கூறினால் கொரோனா ஒழிந்து விடும் என்று பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸ் ஒழியவும், மக்கள் நலமுடன் இருக்கவும் ஆன்மீக வழியில் முயற்சிகளை மேற்கொள்ளோம். ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை உங்கள் வீடுகளில் தினமும் 5 முறை அனுமன் மந்திரத்தை கூறுகள். இந்த பூஜையின் முடிவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கடவுள் ராமருக்கு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.

ஊரடங்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி (மத்தியபிரதேசம்) முடிவடைந்தாலும் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த பூஜை நிறைவடையும். இதை நாம் தீபாவளி போன்று கொண்டாட வேண்டும். மக்கள் அனைவரும்... நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் ஒன்றாக அனுமன் மந்திரத்தை கூறும்போது அது நிச்சயம் வேலை செய்யும். நாம் கொரோனா வைரசில் இருந்து விடுபட்டுவிடுவோம்.. இது கடவுள் ராமருக்கான உங்கள் பிராத்தனை என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்