செய்திகள்

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரத்தை தாண்டியே அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 90,900 ஆக உள்ளது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 13,569 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில கோடம்பாக்கத்தில் மட்டும் அதிகபட்சமாக 2,108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதன் விவரம் பின்வருமாறு:-

அண்ணா நகர்- 1689 பேர்

திரு.வி.க.நகர் - 1213 பேர்

தேனாம்பேட்டை- 1155 பேர்

அடையாறு- 1146 பேர்

அம்பத்தூர்- 938 பேர்

ராயபுரம்- 885 பேர்

வளசரவாக்கம்- 748 பேர்

தண்டையார்பேட்டை- 700 பேர்

ஆலந்தூர்- 542 பேர்

திருவொற்றியூர்- 433 பேர்

பெருங்குடி- 407 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.