சிறப்புக் கட்டுரைகள்

‘ரெட்ரோ ஸ்டைல்' புகைப்படங்களை உருவாக்க ஏ.ஐ. செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா...?

ஒரு புகைப்படத்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கும்போது முதலில் அது சர்வருக்கு அனுப்பப்படுகிறது.

சென்னை,

'ரெட்ரோ ஸ்டைல்'

சமூக வலைத்தளங்களில் தற்போது 1980-களின் 'ரெட்ரோ ஸ்டைல்' புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தலைமுடி அலங்காரம், பழங்கால ஆடைகள், ஸ்டுடியோ பின்னணி உள்ளிட்ட அம்சங்களுடன் தங்களது புகைப்படங்களை மாற்றி பலரும் பதிவிட்டு 'டிரெண்டிங்' ஆக்கி வருகின்றனர். இதற்காக பெரிய அளவில் எந்த முயற்சியும் தேவையில்லை.

சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கருவிகளில் புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு, 1980-களின் ஸ்டை லில் மாற்றி அமைக்கும்படி கட்டளையிட்டால் போதும். சில ஏ.ஐ. கருவிகளே அதற்கான 'பிராம்ப்ட்-ஐ வழங்குகின்றன. இதனால் ஒரே நபர் ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் உலவ விட்டு வருகின்றனர். ஆனால், இலவசமாக உருவாக்கப்படும் இந்த புகைப்படங்களுக்கு பின்னால் மிகப்பெரிய அளவிலான மின்சாரம், தண்ணீர் மற்றும் தொழில்நுட்ப வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தரவு மையங்கள்

ஒரு புகைப்படத்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கும்போது முதலில் அது சர்வருக்கு அனுப்பப்படுகிறது. அங்கு நெட்வொர்க் மற்றும் சேமிப்பு வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு, புகைப்படத்தில் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரான உள்ளடக்கம் உள்ளதா என்பது பரிசோதிக்கப்படுகிறது. தொடர்ந்து, புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங் செயல்முறை தொடங்குகிறது.

இதற்காக ‘ஜி.பி.யூ.' உள்ளிட்ட சக்திவாய்ந்த பிராசசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதுடன் வெப்பத்தையும் உருவாக்குகின்றன. இந்த வெப்பத்தை கட்டுப்படுத்த தரவு மையங்களில் குளிரூட்டும் அமைப்புகள் செயல்படுகின்றன. இதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

செலவு எவ்வளவு?

ஏ.ஐ. நிறுவனத்தின் இரண்டு வெவ்வேறு மென்பொருட்கள் அல்லது செயலிகள் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் செயலி நிரலாக்க இடைமுகம் (ஏ.பி.ஐ.) விலையை அடிப்படையாகக் கொண்டால், 1024x1024 'பிக்சல்' அளவிலான அதாவது 27.09 செ.மீ. என்ற சமச்சீர் அளவி லான 10 குறைந்த தரத்திலான ஏ.ஐ. படங்களை உருவாக்க சுமார் ரூ.10, நடுத்தர தரத்திலான 10 படங்களுக்கு சுமார் ரூ.36, உயர்தர 10 படங்களுக்கு சுமார் ரூ.142 செலவாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஏ.ஐ. நிறுவனங்களின் அடிப்படை செலவு மட்டுமே.

மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு உள்ளிட்ட பிற செலவுகள் இதில் அடங்காது. ஏ.ஐ. மூலம் ஒரு புகைப்படத்தை உரு வாக்க சுமார் 1.2 வாட் மின்சாரம் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால், பயன்படுத்தப்படும் ஏ.ஐ. மாடல் மற்றும் கம்ப்யூட்டிங் அமைப்பைப் பொறுத்து இந்த அளவு மாறுபடலாம். சில மதிப்பீடுகளில் ஒரு படத்திற்கு 0.1 முதல் 4 வாட் வரை மின்சாரம் தேவைப்படலாம் என கூறப்படுகிறது.

அழுத்தம்

ஒரு நபர் ஒன்று அல்லது இரண்டு படங்களை உருவாக்குவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஏ.ஐ. புகைப் படங்களை உருவாக்கும்போது அதன் மொத்த தாக்கம் அதிகரிக்கிறது. ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தனிநபர் உருவாக்கும் ஒரு படம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், உலகம் முழுவதும் உருவாக்கப்படும் கோடிக்கணக்கான படங்களின் மொத்த நுகர்வு தரவு மையங்கள், மின்சாரம் மற்றும் நீர்வளத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூ டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT