சிறப்புக் கட்டுரைகள்

உலகின் முதல் வழிபாட்டுத் தலமாக கருதப்படும் இடம் எது தெரியுமா?

இங்குள்ள கல்தூண்கள் அனைத்தும், கல்கருவிகளைக் கொண்டே செதுக்கப்பட்டிருக்கின்றன.

துருக்கி நாட்டில் உர்பா நகருக்கு அருகில் சுண்ணாம்பு பீட பூமி இருக்கிறது. இதன் மீது 'கோபெக்லி டெபே' என்ற மலைப்பகுதி அமைந்துள்ளது. இதற்கு துருக்கி மொழியில் 'பெருவயிறு மலை' என்று பொருள். இந்த மலை கடலில் இருந்து சுமார் 760 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த இடம், 1990-களுக்குப் பின்னர்தான் உலகத்தின் பார்வைக்கு வந்தது. இங்கே 1990-களில் நடைபெற்ற முதல் ஆய்வின் போது, ஜெர்மானிய தொல்லியல் அறிஞர் ஸ்மித் என்பவர் இந்த இடத்தைக் கண்டுபிடித்தார். மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளைப் புரட்டிப்போடும் வகையில் அமைந்திருப்பதுதான். இந்த கண்டுபிடிப்பு என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

முதன்முதலில் வரலாற்று ஆய்வாளர் ஸ்மித் இந்த இடத்தில், 20-க்கும் மேற்பட்ட வட்டக்கல் அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் 20 மீட்டர் விட்டம் கொண்டது. மிகப்பெரிய கல்லாக இருந்தது. இந்த வட்டக் கலை அடைப்பின் மையத்தில் 5.5 மீட்டர் உயரம் உள்ள, செதுக்கப்பட்ட இரண்டு தூண்கள் நின்றுகொண்டிருந்தன.

மேலும் இங்கு 200-க்கும் மேற்பட்ட கல் தூண்கள் உள்ளன. அவற்றில் 20-க்கும் அதிகமான கல் தூண்கள் 6 மீட்டர் உயரமும், 10 டன் எடையும் கொண்டவை. இந்த கல் தூண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள மனித உருவத்தை தாங்கியுள்ளன.

மனிதர்களால் விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத, மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு பிரமாண்ட கட்டுமானத்தை உருவாக்கியது.

தொழில்நுட்ப ரீதியாக பெரும் சவாலாக இருந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இந்த கட்டமைப்புகள் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல் கருவிகள் மற்றும் பிற சான்றுகள், வட்டக்கல் அடைப்புகள் போன்றவை, வேட்டையாடும் மனிதர்களால் கட்டப்பட்டவை என்பதை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது.

இங்குள்ள கல்தூண்கள் அனைத்தும், கல்கருவிகளைக் கொண்டே செதுக்கப்பட்டிருக்கின்றன. கல் தூண்கள் செய்வதற்காக அருகில் உள்ள சுண்ணாம்பு பாறையை வெட்டி எடுத்திருக்கிறார்கள். ஒரு தூண் செதுக்கப்பட்டதும். அதனை கயிற்றில் கட்டி மலை உச்சியில் சில நூறு மீட்டர் வரை நகர்த்திச் சென்றுள்ளனர். இதற்கு நிச்சயம் அதிக மனித உழைப்பு தேவைப்பட் டிருக்கும். அப்படியெல்லாம் பல்லாயிரக்கணக்காக மக்கள் இங்கே வாழ்ந்திருக்கக் கூடும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டு, ஆராய்ச்சி தொடர்ந்தபடி இருக்கிறது. இந்த இடத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர் ஸ்மித் கருத்துப்படி, இது சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்கலாம்.

இந்த இடத்தை ஆய்வாளர்கள் 'உலகின் முதன் வழிபாட்டுத் தலம்' என்று பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். இங்கே இன்னும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அவற்றில் இருந்து இன்னும் பல தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில், நம்முடைய மனித நாகரி கத்தின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டி வரலாம்.

SCROLL FOR NEXT