வீடுகளில் அன்றாடம் சேரும் கழிவுகளை தரம்பிரித்து உரமாக மாற்றி இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வு பரப்பப்பட்டு வருகிறது. எனினும் வீட்டு கழிவுகளை கொண்டு தோட்டம் அமைப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர், 220 அடுக்குமாடி குடியிருப்புகளில் சேரும் கழிவுகளை குப்பைக்கு செல்வதை தடுத்து, அங்கேயே உரமாக மாற்றும் செயல்முறையை நிறுவி இருக்கிறார். மேலும் நகரம் முழுவதும் உள்ள குடியிருப்பு சங்கங்கள் தங்கள் அன்றாட கழிவுகளை கரிம உரமாக மாற்றுவதற்கு உதவிடும் நோக்கத்தில் பசுமை சமூக அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம் வீட்டு கழிவுகளை உரமாக மாற்ற முன் வருபவர்களுக்கு பணம் வழங்கி ஊக்கப்படுத்துகிறார். கேதர் சோஹோனி முயற்சியால் 70 சதவீத கழிவுகள் குறைந்திருக்கிறது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற தொடங்கினேன். அதன் ஒரு அங்கமாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டேன். பின்பு ஆரோக்கிய உணவுகள் பக்கம் என் கவனம் திரும் பியது. ரசாயன உரம் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விவசாயிகளுடன் கலந்துரையாடினேன்.
என்னிடம் இயற்கை விவசாயம் செய்வதற்கு போதிய இடம் இல்லாததால் இயற்கை உரம் தயாரிக்க முடிவு செய்தேன். ஏனெனில் இது ரசாயனங்கள் இல்லாதது. நுண்ணுயிரிகள் நிறைந்தது. இவை தாவரங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவும். இதனை தயாரிப்பதற்கு வீட்டு சமையலறை கழிவுகளை சுத்திகரிப்பதே சரியான வழி என்று நினைத்தேன் என்கிறார்.
கேதர் சோஹோனி, விவசாயிகளிடம் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கான நுட்பங்களை புரிந்துகொண்டு சில வாரங்களில் சிறிய உர தொகுப்பை தயார் செய்திருக்கிறார். "உரம் தயாரிப்பது எளிமையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆரோக்கியமானது என்பதை உணர்ந்தேன். 220 அடுக்குமாடி குடியிருப்பு களைக் கொண்ட எனது குடியிருப்பு வளாகத்தில் இதை பெரிய அளவில் செயல்படுத்த முடிவு செய்தேன்.
இது தொடர்பாக குடியிருப்பு சங்க நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தினேன். அவர்களிடத்தில் இயற்கை உர செயல்முறையை சாத்தியப்படுத்த முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. இதையடுத்து குடியிருப்புகளில் இருந்து கழிவுகளை சேகரிக்கும் செயல்முறை, அது தொடர்பான பிரச்சினைகள், உலர் மற்றும் ஈரமான கழிவுகளை பிரிக்கும் முறை போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தேன். நான்கு மாதங்களில் இயற்கை உர தயாரிப்பு யுக்தியை முழுமையாக கற்றுக்கொண்டு குடியிருப்பு வளாகம் முழுவதும் செயல்படுத்த தொடங்கினேன். ஒவ்வொரு வீட்டிலும் 72 டன் கழிவுகளை மாற்றுவதற்கு உதவ முடிந்தது என்கிறார்.
ஈரமான மற்றும் உலர்ந்த கழிவுகளை தரம் பிரித்து உரமாக உருமாற்றுவதற்கான கட்டமைப்புகளை குடியிருப்பு வளாகத்திற்குள் நிறுவி இருக்கிறார். அவரது முயற்சியை பாராட்டி சில சமூக அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.
மும்பையில் ஒரு காலத்தில் குப்பைத்தொட்டி நகர்ப்புறத்திற்கு வெளியே இருந்தது. ஆனால் இப்போது நகரின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அப்படி ஒரே இடத்தில் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொட்டுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கும். சில சமயங்களில் குப்பை தொட்டிகளில் உள்ள கழிவுகள் எரிக்கப்படுகின்றன.
அதிலிருந்து தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்கள் வெளியேறி பொதுமக் களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நகரின் வெளிப்பகுதியில் குவியலாக கொட்டப்படும் குப்பை கூளங்களில் இருந்து வெளியாகும் நச்சு நீர் நிலத்தடி நீருடன் கலந்து நீர் ஆதாரங்களை மாசு படுத்துகின்றன. இதற்கு தீர்வு காண்பது பொதுமக்கள் கைகளில்தான் உள்ளது. குப்பைகளை தரம் பிரித்து பயனுள்ளதாக மாற்றுவதற்கு பழக வேண்டும் என்கிறார்.
2017-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை துறையில் பணிபுரியும் நிபுணர்களை ஒன்றிணைத்து பசுமை சமூக அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார்.
இதன் மூலம் பல்வேறு குடியிருப்பு சங்கங்களை அணுகி, கழிவு மேலாண்மையை நிர்வகிக்க வலி யுறுத்தி வருகிறார். குப்பை கழிவுகளை உரமாக மாற்றும் கட்டமைப்புகளையும் நிறுவி வருகிறார்.
பெங்களூருவில் பரவலாக நடைமுறையில் இருக்கும் எபெக்டிவ் மைக்ரோ ஆர்கனிசம் கரைசலை பயன்படுத்தி ஏரோபிக் கம்போஸ்டிங்கை நாங்கள் செயல்படுத்துகிறோம். இந்த உர தயாரிப்பு செயல்முறையை எளிமையாக்குவதற்காக கூண்டு மற்றும் டிரம்மை பயன்படுத்துகிறோம் என்றும் சொல்கிறார்.