சிறப்புக் கட்டுரைகள்

நிதி நிலை முடிவுகள்

இந்திய நிறுவனங்கள் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

ரெப்கோ ஹோம் பைனான்ஸ்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம், முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) ரூ.62 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.61 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 7 சதவீதம் உயர்ந்து (ரூ.119 கோடியில் இருந்து) ரூ.127 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செயல்பாட்டு வருவாய் 14 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.328 கோடியாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது 4 சதவீதமாக இருந்தது.

ஷிப்பிங் கார்ப்பரேஷன்

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.29 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.190 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு கணிசமாக குறைந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.913 கோடியில் இருந்து) ரூ.968 கோடியாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த செலவினம் ரூ.990 கோடியாக குறைந்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,103 கோடியாக இருந்தது.

நாட்கோ பார்மா

நாட்கோ பார்மா நிறுவனம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.143 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.181 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 21 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 11 சதவீதம் குறைந்து ரூ.513 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.574 கோடியாக இருந்தது.

செஞ்சுரி பிளைபோர்டு

செஞ்சுரி பிளைபோர்டு நிறுவனம், முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) ரூ.40 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.41 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 2 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 7 சதவீதம் அதிகரித்து (ரூ.542 கோடியில் இருந்து) ரூ.582 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.48 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் உயர்வாகும். அப்போது லாபம் ரூ.45 கோடியாக இருந்தது.

ரிலையன்ஸ் நேவல்

ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினீயரிங் நிறுவனம், ஜூன் காலாண்டில் ரூ.370 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனத்தின் இழப்பு ரூ.361 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு அதிகரித்து இருக்கிறது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 27 சதவீதம் குறைந்து (ரூ.37 கோடியில் இருந்து) ரூ.27 கோடியாக குறைந்து இருக்கிறது.

பியூச்சர் என்டர்பிரைசஸ்

பியூச்சர் என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.9 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டு இருக்கிறது கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.17 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.1,353 கோடியில் இருந்து) ரூ.1,424 கோடியாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,440 கோடியாக இருக்கிறது.