சிறப்புக் கட்டுரைகள்

கடல் நீரில் இருந்து உப்பு நீக்கப்பட்டு நன்னீர் மழையாகப் பொழிவது எப்படி?

சிறிய நீர்த்துளிகளாக மாறி மேகங்களை உருவாக்குகிறது.

கடலில் ஏராளமான உப்பு நிறைந்துள்ளது. ஆனால், அதே கடலில் இருந்துதான் நமது வீடுகள், காடுகள், ஆறுகள் மீது பொழியும் நன்னீர் மழையும் உருவாகிறது. இயற்கையின் இந்த அற்புதமான நிகழ்வு எந்த இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் நடைபெறுகிறது. இது எப்படி சாத்தியம் என்று யோசித்திருக்கிறீர்களா?

நீர்

சூரியனின் வெப்பம் கடல் நீரை சூடாக்கும்போது. நீர் மூலக்கூறுகள் கடலின் மேற்பரப்பில் இருந்து ஆவியாகி, கண்ணுக்கு தெரியாத நீராவியாக வளிமண்டலத்திற்கு செல்கின்றன. ஆனால், நீரில் கரைந்துள்ள உப்புகள் நீராவியுடன் சேர்ந்து செல்வதில்லை. சாதாரண சூழலில் உப்புகள் ஆவியாகாது என்பதால் அவை கடலிலேயே தங்கிவிடுகின்றன.

அதனால் மேலே செல்லும் நீராவி குளிர்ச்சியடையும் போது அது சிறிய நீர்த்துளிகளாக மாறி மேகங்களை உருவாக்குகிறது. பின்னர் அந்த மேகங்களில் இருந்து மழை பொழிகிறது. இவ்வாறு இயற்கையான முறையில் கடல் நீரில் இருந்து பெரும்பாலான உப்புகள் பிரிக்கப்பட்டு நன்னீர் மழையாக நமக்கு கிடைக்கிறது.

இருப்பினும், மழைநீர் முற்றிலும் தூய்மையானது அல்ல. வளிமண்டலத்தில் பயணிக்கும் போது அதில் சிறிதளவு கடல் உப்பு, வாயுக்கள் மற்றும் பிற நுண்துகள்கள் கலக்கலாம். ஆனாலும், கடல் நீருடன் ஒப்பிடும்போது மழைநீரில் உப்பின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும்.

SCROLL FOR NEXT