அதே சமயம் டெக் மகிந்திரா பங்கு அதிக ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனப் பங்கு ரூ.545-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.550-க்கும், குறைந்தபட்சமாக ரூ.535.90-க்கும் சென்றது. இறுதியில் ரூ.537.05-ல் நிலைகொண்டது. இது, கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.55 சதவீத சரிவாகும்.
திங்கள்கிழமை அன்று டெக் மகிந்திரா நிறுவனப் பங்கு தொடக்கத்தில் ரூ.710.60-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.723.60-க்கு சென்றது. இறுதியில் ரூ.719.15-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்தை காட்டிலும் 1.41 சதவீத உயர்வாகும்.