சிறப்புக் கட்டுரைகள்

இந்தோ -திபெத் போலீஸ் படையில் வேலை

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் பல்வேறு பணி பிரிவுகளில் 287 கான்ஸ்டபிள் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் தையல்காரர், தோட்டக்காரர், வாஷர்மேன் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 287 கான்ஸ்டபிள் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணிகளுக்கு ஏற்ப டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

22-12-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 25 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. உடல் தகுதித்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-12-2022. மேலும் விரிவான விவரங்களை http://www.recruitment.itbpolice.nic.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை