சிறப்புக் கட்டுரைகள்

ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள்

இந்திய நிறுவனங்கள் தமது ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன

முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

அப்பல்லோ டயர்ஸ்

அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.84 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.250 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.3,982 கோடியில் இருந்து) ரூ.4,176 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

சென்ற நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.17,273 கோடி வருவாயில் ரூ.680 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டில் இதன் வருவாய் ரூ.14,929 கோடியாக இருந்தது.

கில்லெட் இந்தியா

கில்லெட் இந்தியா நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.48 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.36 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.453 கோடியில் இருந்து) ரூ.469 கோடியாக உயர்ந்துள்ளது.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம், நான்காவது காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) 22 சதவீத சரிவுடன் ரூ.746 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.962 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.3,605 கோடியில் இருந்து) ரூ.3,880 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த நிதி ஆண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.7 இறுதி டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

ஈ.ஐ.டீ. பாரி

ஈ.ஐ.டீ. பாரி நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.202 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.40.48 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 4 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.3,378 கோடியில் இருந்து) ரூ.3,671 கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.15,611 கோடியில் இருந்து) ரூ.16,518 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

டாட்டா கம்யூனிகேஷன்ஸ்

டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.199 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.121 கோடியை இழப்பாகக் கண்டிருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.4,243 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனம் ரூ.82 கோடியை இழப்பாகக் கண்டிருக்கிறது. முந்தைய ஆண்டில் அது ரூ.329 கோடியாக இருந்தது. இதே காலத்தில் அதன் வருவாய் 1.5 சதவீதம் குறைந்து ரூ.16,525 கோடியாக உள்ளது.

சாட்டின் கிரெடிட் கேர்

சாட்டின் கிரெடிட் கேர் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.56 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.38 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 47 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 19 சதவீதம் உயர்ந்து ரூ.350 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 169 சதவீதம் அதிகரித்து ரூ.201 கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.75 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இதன் வருவாய் 40 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,448 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

புராக்டர் அண்டு கேம்பிள்

புராக்டர் அண்டு கேம்பிள் ஹைஜீன் அண்டு ஹெல்த்கேர் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.90 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.83 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 23 சதவீதம் அதிகரித்து (ரூ.569 கோடியில் இருந்து) ரூ.699 கோடியாக உயர்ந்துள்ளது.

குஜராத் காஸ்

குஜராத் காஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.117 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.66 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 77 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.1,778 கோடியில் இருந்து) ரூ.1,963 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 43 சதவீதம் அதிகரித்து ரூ.417 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

வோக்கார்டு

வோக்கார்டு நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.14 கோடியை இழப்பாகக் கண்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.155 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 4 சதவீதம் சரிந்து (ரூ.1,018 கோடியில் இருந்து) ரூ.979 கோடியாக உயர்ந்துள்ளது.

2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.4,158 கோடி வருவாயில் ரூ.194 கோடி இழப்பு கண்டு இருக்கிறது.