சிறப்புக் கட்டுரைகள்

கோடி கோடியாய் சொத்து இருந்தும் மகளுக்குப் பணம் தராத மெலிண்டா

மெலிண்டா 34 பில்லியன் டாலர் (ரூ.3.30 லட்சம் கோடி) சொத்துகளுக்கு சொந்தக்காரர்.

கோடி கோடியாய் சொத்து இருந்தும், பிரபல பெண்மணி மெலிண்டா கேட்ஸ், தனது மகள் தொழில் தொடங்க பணம் தர மறுத்துவிட்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சின் முன்னாள் மனைவியான மெலிண்டா ஆன் பிரெஞ்ச் கேட்ஸ், உலகின் மிகப் பெரும் பணக்கார பெண்மணிகளில் ஒருவர். இவர், 34 பில்லியன் டாலர் (ரூ.3.30 லட்சம் கோடி) சொத்துகளுக்கு சொந்தக்காரர். கேட்ஸ் பவுண்டேஷன் இணை நிறுவனராக, சமூக சேவைப் பணிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறார்.

மெலிண்டாவின் இளைய மகள் பீபி கேட்ஸ். இவர் தனது ஸ்டான்போர்டு பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து, 'பியா' என்ற பேஷன் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனத்தை (ஸ்டார்ட் அப்) தொடங்கியுள்ளார்.

இந்த இணையதளம், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகளின் விலைகளை ஒப்பிட்டு, பயனாளர்கள் சிறந்த சலுகைகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

இந்த புத்தொழில் நிறுவன முதலீட்டுக்காக பீபி பணம் கேட்டபோதுதான், அவரது தாய் மெலிண்டா மறுத்துவிட்டாராம்.

மெலிண்டா, அது உண்மையான பிசினஸ் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதை ஆதரிக்க வேண்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

மேலும், தனது மகள், நிராகரிப்பு மற்றும் சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும் என்ப தற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் மெலிண்டா விளக்கம் அளித்துள்ளார்.

பில் கேட்ஸ், தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறை வாகவே பெறுவார்கள் என்று முன்பே அறிவித்திருந்தார். அதே கொள்கையை அவரது முன் னாள் மனைவி மெலிண்டாவும் பின்பற்றுகிறார்.

இன்றைக்கு பெண் தொழில்முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களைச் சந்திக்கின்றனர் என்றும், அதேநேரம் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன் னேற வேண்டும் என்றும் மெலிண்டா கூறுகிறார்.

மகளுக்குப் பணம் கொடுக்க மறுத்த மெலிண்டாவின் முடிவு, அவரவர் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கேட்ஸ் குடும்பத்தின் கொள்கையைக் காட்டுவதாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT