சிறப்புக் கட்டுரைகள்

சூழலுக்கு ஏற்ப மாறும் மனநிலைகள்... கட்டுப்படுத்தும் வழிகள் என்னென்ன...?

வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மனநிலை அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.

மனநிலை

எல்லோருக்கும் மனநிலை ஒரே மாதிரியாக நிலைத்திருப்பதில்லை. வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் மகிழ்ச்சி, சில நேரங்களில் சோகம், கோபம், பதற்றம், மன அழுத்தம் போன்ற உணர்வுகள் உருவாகும். இவை இயல்பானவை என்றாலும் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் வாழ்க்கையே தடுமாற்றத்துக்குள்ளாகும். அதற்கு இடம் கொடுக்காமல் மாறும் மனநிலைகளை சமநிலைப்படுத்துவது முக்கியம்.

முதலில், மனநிலையை சுயமாக அறிதல் அவசியம். எப்போது நமக்கு கோபம் வருகிறது, எப்போது மன அழுத்தம் அதிகமா கிறது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். இந்த சுய அறிவு, மனநிலையை கட்டுப்படுத்துவதற்கான முதல் படியாகும்.

தியானம்

அடுத்ததாக, ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானம் போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்கலாம். இவை மனதை அமைதி யாக்கி, உணர்ச்சிகளை சமப்படுத்த உதவிடும். தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வதும் மனநிலையை கட்டுப்படுத்த வழிவகை செய்யும். மேலும், நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியம். எதிர்மறை எண்ணங்களை குறைத்து, நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தினால் மனநிலை சீராக இருக்கும்.

அதேபோல், உடற்பயிற்சி செய்வதும் மனநலத்திற்கு பலம் சேர்க்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும், உற்சாகமாக இருக்கும். இதனுடன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் மனதை அமைதியாக்கும் சிறந்த வழியாகும். நல்ல புத்தகங்கள் புதிய சிந்தனைகளை அளித்து, கவலைகளை மறக்கச் செய்யும் அருமருந்தாகும்.

பிடித்த பாடல்

அதேபோல், நடைப்பயிற்சி மிகவும் எளியதும், பயனுள்ளது மான வழிமுறையாகும். இயற்கைச் சூழலில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்ச்சி கிடைக்கும். மனநிலையை சமநிலைப்படுத்தவும் துணைபுரியும். மிகவும் கடுமையான மனஅழுத்தம் அல்லது நீண்டநாள் மனநிலை பிரச்சினைகள் இருப்பின், நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம்.

நமக்குப் பிடித்த பாடல்கள் அல்லது இசையை கேட்பது மனதை மாற்றும் சக்தி உடையது. ஏனெனில் இசை சிறந்த மனநல மருந்தாக கருதப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவது. நம்முடைய உணர்ச்சிகளை பகிர்வது போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும். தனியாக எல்லாவற்றையும் சமாளிக்க முயற்சிப்பதை விட மற்றவர்களின் ஆதரவை பெறுவது நல்லது.

மன அமைதியே நல்வாழ்க்கையின் அடிப்படை

இறுதியாக, மனநிலைகள் மாறுவது இயல்பு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவை நம்மை கட்டுப்படுத்தாமல், நாம் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சரியான பழக்கங்களையும், நல்ல சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டால், மாறும் மனநிலைகளை எளிதாக சமாளிக்கலாம். மன அமைதியே நல்வாழ்க்கையின் அடிப்படை அதனை பேணுவதற்காக மனநிலைகளை கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.