ஓப்போ நிறுவனம் ஏ 54 எஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 5-ஜி இணைப்பில் செயல்படும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் நீல நிறங் களில் வந்துள்ளது. 6.52 அங்குல ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளன. இது 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார், புளூடூத் வி 5 இணைப்பு கொண்டது. டைப் சி போர்ட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், விரைவாக சார்ஜ் ஆக 10 வாட் சார்ஜர், நீடித்து செயல்பட 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை சுமார் ரூ.17,500.