சிறப்பு செய்திகள்

கோயம்புத்தூரில் இருந்து லெய்ப்ஜிக் வரை.. ஒரு ரேசரின் பயணம்

ஜி.டி.நாயுடு தயாரித்த பிளேடு, ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிகவும் மெல்லியதாகும்.

ஒரு இந்திய கண்டுபிடிப்பாளர் பொறியியல் பட்டம்கூட இல்லாமல், நாட்டிலேயே முதல் முறையாக மின்சார ரேசரை, உருவாக்கி அதற்கு ஜெர்மனியில் கைத்தட்டலையும் பெற்றார்.

கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஜிடி நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்தால் அந்த ஹாலின் அளவுதான், நாம் முதலில் கவனிக்கும் விஷயமாக இருக்கும். அதில் உள்ள பொருட்கள் ஒரு தொழில் முன்னோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் எவ்வளவு படாடோபமாக வைக்கப்பட்டிருக்க வேண்டுமோ அப்படி இருக்காது. வெல்வெட் விரிப்புகள் இருக்காது. வண்ணமயமான விளக்குகளும் இருக்காது. அந்த ஷோகேஸ்கள் மிகவும் பழையதாக காட்சியளிக்கும்.

அதில், மின்சார மோட்டார், மண்ணெணெயில் இயங்கும் காற்றாடி உள்ளிட்ட விதவிதமான பொருட்களின் நடுவே சற்றும் முக்கியத்துவம் அற்ற வகையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு பொருளை காணலாம். மிகவும் ஒல்லியாக, கையால் தயாரிக்கப்பட்டு கூர்தீட்டப்பட்டிருக்கும் ஒரு ரேசர் (சவரக் கருவி) இருக்கும். அதின் ஸ்டீல் பகுதியில் அந்த ரேசரை உருவாக்கியவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

ரேசரின் பின்னால் உள்ள மனிதர்

ஜி.டி. நாயுடு என நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு, 1893 இல் இன்று உள்ள கோயம்புத்தூரில் சில மணி நேர பயண தொலைவில் இருக்கும் கலங்கல் என்ற பகுதியில் பிறந்தார். சிறுவயதில் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இதற்கு அவரை குறித்து வெளியான சுயசரிதைகளில் பல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் பொறுமையற்று இருந்தார். அந்த கல்விக் கட்டமைப்பு அவருக்கு பொருந்தவில்லை. பேனாவை விட தன் கைகளே சிறந்ததாக அவருக்கு பட்டது. எனவே அவர் வேலைக்கு சென்றார். முதலில் பண்ணை வேலைக்கும் பின், ஜவுளி ஆலையிலும் பணியாற்றினார். அதன்பின் சொந்தமாக பஸ் ஒன்றை வாங்கி, மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள சிறிய வழித்தடத்தில் அதை அவரே டிரைவராக இருந்து ஓட்டி வந்தார்.

அதன் பின் ஒரு சில ஆண்டுகளில் அந்த டிரைவர், ஒரு பஸ் அதிபராக உருவெடுத்தார். அவரின் 20களின் பிந்தைய பகுதியில் யூனியன் மோட்டார் சர்வீஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தை நடத்தினார். தென் இந்தியாவிலேயே மிகவும் ஆரம்பகட்டத்தில் இயங்கி வந்த போக்குவரத்து நெட்வொர்க் அவருடையது ஆகும். பஸ் தொழில் அவருக்கு இன்ஜின்களை பற்றிய அறிவை தந்தது. இன்ஜின்கள், பொருட்களை வரையும் கருவி மேலான ஆர்வத்தை தூண்டியது. அந்த கருவி பின்னர் தொழிற்பட்டறைக்கு இட்டுச் சென்றது. அந்த தொழில்பட்டறை 1920களின் பிற்பகுதியிலும், 1930களின் முற்பகுதியிலும் மிகசிறந்த ஒன்றாக பரிணமித்தது. ஒரு நபர் தொழில்பட்டறையான அது, பெரிய படிப்பு எதுவும் தேவைப்படாத உள்ளூர் பொறியியலை மையமிட்டு இயங்கியது. கோயம்புத்தூர் ஒரு உற்பத்தி தலைநகரமாக மாறும் என்று அப்போது யாரும் கற்பனை செய்திருக்க முடியாது.

தன் தொழில் வாழ்க்கை முழுக்க நாயுடுவுக்கு இருந்த அந்த உள்ளுணர்வு மிகவும் எளிமையுடன் இருந்தது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளையும் பார்த்து அவருக்கு ஒரு கேள்வி தான் எழுந்தது, "இதை ஏன் இந்தியாவிலேயே செய்யக்கூடாது?” என்ற கேள்விதான் அது. ஏன் ஜவுளி இயந்திரத்தை லான்சசைரில் (இங்கிலாந்து) இருந்து இறக்குமதி செய்யவேண்டும், அதை கோயம்புத்தூரிலேயே ஏன் செய்ய கூடாது? ஒரு மின்சார மோட்டாருக்காக ஏன் வெளிநாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும்? 1937இல் வளர்ந்து வரும் இந்திய தொழில்சாலைகள் பயன்படுத்துவதற்காக கோயம்புத்தூரிலேயே தொழிற்பட்டறையில் உருவாக்கப்படும் பொருட்களை வைத்து ஏன் அதை உருவாக்க கூடாது?

இதுபோல அவருக்கு இருந்த இந்த தீராத தேடல் தான், 1930களின் பிற்பகுதியில் அவரது ஆர்வத்தை ஒரு சிறிய பொருளை நோக்கி நகர்த்தியது. அவரது கழிவறையில் இருந்த ஒரு சேஃப்டி ரேசர் அது.

நாயுடு கண்ட பிரச்சனை என்ன?

1930 மற்றும் 40களில் இந்திய வீடுகளில் இருந்த ஷேவிங் ரேசர் என்பது இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருள். அதிலும் அமெரிக்காவில் இருந்து வரும் ஜில்லெட், இங்கிலாந்தில் இருந்து வரும் வில்கின்சன் சுவார்ட், ஜெர்மனியில் இருந்து வரும் ராட்பார்ட் ஆகிய சிறந்த ரேசர்கள், ஒரு சராசரி இந்தியனுக்கு எட்டாக்கனியாவே இருந்து வந்தது. மலிவு விலையில் கிடைத்தவை மிகவும் கரடுமுரடாக, பாதுகாப்பு இன்றி, மொன்னையாக இருந்தது. ஒவ்வொரு குடிமகனும் வீட்டில் தினமும் சவரம் செய்துகொள்ளும் ஒரு நாட்டில், கடன்வாங்கப்பட்ட பிளேடும், மிகச்சிறிய ரேசரும் ஒரு கசப்பான பொருளாதார உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்தியா அப்போது சொந்தமாக தயாரிக்கத் தொடங்கவில்லை.

எனவே அவர் எலக்ட்ரிக் பிளேடை கண்டுபிடித்தார். அது மிகவும் சிறியது. இருப்பினும் சரியான அளவில் கச்சிதமாக இருந்தது. இந்திய வாழ்க்கைமுறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள், இந்தியரின் கைகளால், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வாங்கக்கூடிய விலையில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டால் அது எப்படி இருக்கும் என்று அவர் சிந்தித்தார். அந்த சிந்தனையின்மீது நம்பிக்கை வைத்து அவர் செயல்பட்டார். அவரின் நம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் அந்த ரேசர் தான்.

ரேசன்ட் ரேசர் கண்டுபிடிப்பு

1935-36 இல் நாயுடுவின் தொழிற்பட்டறையில் இருந்து உருவான ரேசர், அதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட வேறெதையும் போன்றது அல்ல. அந்த மின் ரேசரை அவர் ரேசன்ட் என அழைத்தார். அந்த பெயர் அதற்கு ஏற்ற கச்சிதமாக, அதன் வேகத்தையும், துல்லியத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. அதற்கு போட்டியாக இருந்தவை மிகவும் பளுவாக இருந்த நிலையில் அது மிகவும் மெலிதாக இருந்தது, கையடக்கமாக இருந்தது. நாயுடுவால் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்களால், அது உற்பத்தி செய்யப்பட்டது.

ரேசன்ட் உடைய முக்கிய பகுதி அதன் பிளேடும், சட்டகமும் தான். UMS பிளேட் என அழைக்கப்படும் பிளேட் தான் எல்லா ரேஸர்களிலும் முக்கியமான ஒன்று. எந்த கோணத்தில் வெட்ட வேண்டும், பயனர்களின் பாதுகாப்பு, சவரம் செய்வதற்கு சௌகர்யமாக இருப்பது என அனைத்தையும் அது தான் தீர்மானிக்கிறது.

நாயுடு தயாரித்த பிளேடு, அப்போதும் சரி இப்போதும் சரி, ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்டதிலேயே மிகவும் மெல்லியதாகும். அது கைகளாலேயே துல்லியமாக செய்யப்பட்ட நேர்த்தியை ஐரோப்பாவில் இருந்து வந்து அதை சோதித்தவர்களே வியந்தனர்.

கோயம்புத்தூர் தொழிற்பட்டறையிலேயே செய்யப்பட்ட ரேசரின் சட்டகம் (பாடி), எடை குறைவாக, சமன்பாட்டுடன், குறிப்பாக அதை அசெம்பிள் செய்ய ஜெர்மனியில் உள்ளது போன்ற பெரிய தொழில்நுட்ப குழுவெல்லாம் தேவைப்படாத வகையில் உள்ளூர் தொழிலாளர்களே எளிதில் செய்துமுடிக்கும் வகையில் இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் ரேசர் என்று நினைத்துப் பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்த அந்த காலத்தில் மின்சார சவரக் கருவியை வடிவமைத்து தயாரித்தது எல்லாம் வியக்கத்தக்க விஷயம். மோட்டார்களையும், மின்சாதனகளையும், தன் பழக்கவழங்களில் புதுமைகளையும் கூட வெளிநாட்டில் இருந்து பெறும் ஒரு நாட்டில் சத்தமே இல்லாமல் சொந்த தயாரிப்பு ஒன்று நிகழ்ந்தது, அதுவும் கோயம்புத்தூரில்.

ரேசன்ட்டை பொறுத்தவரை ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அப்படி ஒன்று இந்தியாவில் முதல் முறை உருவானது என்பதை விட, அது சிறப்பாகவும் இருந்தது என்பதுதான்.

லெய்ப்ஜிக் தலைவணங்கிய தருணம்

லெய்ஜிகர் மெஸ்ஸே எனப்படும் ஜெர்மனியின் லெய்ப்ஜிக் நகரில் நடக்கும் வணிக பொருட்காட்சி, 8-க்கும் மேற்பட்ட நாடுகளை கொண்ட மத்திய ஐரோப்பாவிலேயே நடக்கும் மிகப்பெரிய தொழிற் காட்சி ஆகும். ஐரோப்பிய காலண்டர்படி, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடக்கும் அந்த மிக முக்கியமான வணிக ஒன்றுகூடலில் ஐரோப்பிய கண்டம் முழுதும் இருக்கும் உற்பத்தியாளர்கள், தங்களின் சிறந்த பொருட்களை உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து பெருந்தொகை கொடுத்து வாங்குபவர்களுக்காக காட்சிப்படுத்துவர். எனவே லெய்ப்ஜிக்கில் ஒரு பொருளை காட்சிப்படுத்துவது என்பது மிகப்பெரிய விஷயம். லெய்ப்ஜிக்கில் வெற்றி பெறுவது என்பது, ஜெர்மன் பொறியியல் பாரம்பரியத்தில் நன்மதிப்பு பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் சிறு சமூகத்திற்குள் இடம்பிடிப்பதை குறிக்கிறது.

1936, லெய்ப்ஜிக்கில், ஜிடி நாயடு தனது ரேசன்ட் ரேசரை அதன் பிளேடுடன் எடுத்துச் சென்று காட்சிப்படுத்தி கவனம் பெற்றார். ஜிடி நாயடு அறக்கட்டளை ஆவணகளின்படியும், வாய்மொழியாக 3 தலைமுறைகளாக கூறப்பட்ட வரலாற்றின் படியும் அந்த மின்சார ரேசர் அதன் ஒல்லியான, துல்லியமான நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட பிளெடுக்காக அங்கு போற்றப்பட்டது. இந்திய தொழில்துறைக்கு வெளிநாட்டில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. லெய்ஜிக் மியூசியம் மற்றும் லெய்ப்பிஜர் கண்காட்சி ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களை ஆராய்ந்ததன் மூலம் இந்த கண்டுபிடிப்பு அது காட்சிப்படுத்தப்பட்ட அதே ஆண்டில் கௌரவிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த காட்சியை சற்று கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஹால் முழுக்க ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெரிய உற்பத்தியாளர்கள், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துபவர்கள், அதை வாங்குபவர்கள் என நிறைந்திருக்கும், சுற்றிலும் ஜெர்மன் பாரம்பிய தொழில் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில், மேடையில் இருப்பவர்களிடம் விருதுக்கு தேர்வான பொருள் குறித்த குறிப்பு செல்கிறது. அந்த குறிப்பில் உள்ள கண்டுபிடிப்பாளரின் ஊர் பெயரை கூட அங்கிருப்பவர்கள் இதன் முன் கேட்டிருக்க மாட்டார்கள். ஒரு மிகச்சிறிய இந்திய கருவி. கச்சிதமான முனைகளை கொண்ட ஒரு பிளேட். அறிவிப்பை கேட்டதும் ஜெர்மானியர்கள் எழுந்து நின்று கைத்தட்டும் அளவுக்கு ஒரு கண்டுபிடிப்பை கோயம்புத்தூரை சேர்ந்த அந்த கண்டுபிடிப்பாளர் வழங்கியிருந்தார்.

அந்த தருணம் சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவின் தொழில் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மாறியது. அதை நாம் கற்றுத் தருவதில்லை. அதை நாம் பாடப்புத்தகத்தில் சேர்க்கவில்லை. அதை மெய்ப்பித்து காட்டிய மனிதனுக்கு ஒரு பாரத ரத்னாவோ, பத்ம விபூஷனோ வழங்கப்படவில்லை. நாடு தழுவிய ரசிகர்கள் அவருக்கு இல்லை. தமிழ்நாடு அவரை நினைவுகூர்கிறது. கோயம்புத்தூர் நினைவுகூர்கிறது. ஜெர்மனி அந்த பிளேடை கௌரவித்தது. ஆனால் இந்தியா வெறும் மௌனத்தையே பரிசாக தந்தது.

ஜிடி நாயுடுவின் நம்பிக்கை

UMS ரேசர் பிளேடை பாராட்ட ஐரோப்பா வரிசைகட்டி வந்தது. ஆனால் இந்தியா மறந்தது. இந்த முரண்பாடு வெறும் தற்செயலானது அல்ல, அது ஒரு தொடர்ச்சி. இந்தியா, சுதந்திரத்திற்கு பின் உலகின் உற்பத்தி தேசங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை போலல்லாமல் உள்நாட்டு பொறியியல் வளர்ச்சிக்கு காட்டிய பாராமுகத்தின் வலிமிகுந்த தொடர்ச்சி அது.

ரேசன்ட் பிளேட் சிறியது தான். பொருட்செலவை பொறுத்தவரையும் அது மலிவானது தான். ஆனால் அதன் சிக்கனமான தன்மை தான் அது பெருமளவில் உற்பத்தி செய்யப்படுத்தலுக்கும், உள்ளூரில் பொருளை சந்தைப்படுத்துதலுக்கும் சிறந்தது என தற்போதைய இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் மெச்சக்கூடிய ஒன்றாக உள்ளது. அதுவும் கோயம்புத்தூரில், பொறியியல் பட்டமே பெறாத ஒருவரால் அது கண்டுபிடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் இன்று இந்தியாவின் தற்சார்புள்ள தொழில் சங்கிலி கொண்ட நகரங்களில் ஒன்று. அதன் ஜவுளி சிறு குறு தொழில்கள் உலகுக்கே ஆடைகளை வழங்கி வருகிறது. அதன் சிறு உற்பத்தியாளர்கள் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் தானே இயங்கும் விநியோக சங்கிலியை உருவாக்கியுள்ளனர்.

அதன் பொறியியல் கல்லூரிகள், இந்தியாவுக்கு தேவையான திறமையான பொறியியலாளர்களை உருவாக்கி வருகிறது. இது எல்லாம் அதுவாக நடந்த ஒன்று அல்ல. இது ஜிடி நாயுடுவின் நம்பிக்கையால் உருவானது. நம்பிக்கை வைத்து மதித்தால் இந்திய தொழில்துறையும் உலக நாடுகளுக்கு ஈடாக உயரும் என்று அவர் வைத்த நம்பிக்கையின் நிழலில் விளைந்தவை இவை.

அருங்காட்சியகத்தில் ரேசன்ட்

உங்களால் இன்னும் அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்க்க முடியம். கோவையில் உள்ள ஜிடி நாயுடு அறிவியல் அருங்காட்சியகத்தில் அவர் கண்டுபிடித்த அசல் ரேசன்ட் ரேசர் இன்னும் இருக்கிறது. அவர் கண்டுபிடித்த மற்ற சிறிய சிறிய அதியசங்களுக்கு நடுவே அது உள்ளது. 1937இல் அவர் கண்டுபிடித்த மின் மோட்டார், மண்ணெண்ணையில் இயங்கும் விசிறி, யுஎம்எஸ் ரேடியோ, வாக்குப்பதிவு இயந்திரம், ஜவுளி சாதனம் ஆகியவற்றின் நடுவே அந்த ரேசரும் இருக்கிறது. 1960 முதல் இந்த அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு திறந்தே உள்ளது.

நாட்டில் உள்ள வித்தியாசமான தொழில்துறை அருங்காட்சியகங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. பகுதியளவு அவரின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதாகவும், பகுதியளவு அவர் கண்டுபிடித்த பொருட்களை காட்சிப்படுத்துவதாகவும், உயிரோடு இருக்கும்போது நாடு மதிப்பளிக்க மறந்துவிட்டுட்ட ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் அந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

ஜிடி நாயுடுவின் வாழ்க்கைக் கதையின் பகுதிகளை சொல்லும் படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது. ஜி.டி.நாயுடு குறித்த மேலும் தகவல்களுக்கு... https://events-dailythanthi.com/gdn/