வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு, அன்றாட வாழ்வியலில் ஒருசில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியத்தை தக்கவைப்பதாக அவை இருக்க வேண்டும்.
இத்தகைய நல்ல பழக்கவழக்கங்களையும், அவை ஏற்படுத்தும் மாற்றங்களையும் பார்ப்போம்.
| நல்ல பழக்கங்கள் | பலன்கள் |
|---|---|
| சமச்சீரான, வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளுதல் | உடல் எடையை சீராக பேண முடியும். உடல் வலிமையை தக்க வைக்க இயலும். |
| செல்போன் பார்ப்பதை குறைத்தல்-ஓய்வு எடுத்தல் | சிறந்த தூக்கத்திற்கு வித்திடும். மன அழுத்தம் குறையும். கவனிக்கும் திறன் அதிகரிக்கும். |
| 7-8 மணிநேரம் தூங்குதல் | மனம் புத்துணர்ச்சி பெறும், மன நிலை மேம்படும், ஹார்மோன்கள் செயல்பாடு சீராக இருக்கும். |
| டென்ஷனை குறைத்தல் | மனம் அமைதி பெறும். உணர்ச்சிபூர்வமான சமநிலை பேணப்படும். |
| மெதுவாக சாப்பிடுதல் | சிறந்த செரிமானத்திற்கு வழி வகுக்கும், அதிக அளவு உணவு உட்கொள்வது தடுக்கப்படும். |
| தினமும் உடற்பயிற்சி செய்தல் | உடல் எடை ஆரோக்கியம் பேணப்படும். தசைகள் வலிமையடையும். மன நிலை சீராக இருக்கும். |