கருப்பு உளுந்து - 200 கிராம்
கருப்பு எள் - 200 கிராம்
கறிவேப்பிலை - 4 கொத்து
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயப் பொடி - 1 டீஸ்பூன்
புளி - கோலிக் குண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரம் நன்கு சூடாகியதும், அடுப்பில் தீயை குறைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் கருப்பு எள்ளை போட்டு வறுக்கவும். எள் பொரிந்து வரும்போது, அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து, அதே பாத்திரத்தில் கருப்பு உளுந்து சேர்த்து வறுக்கவும். பொரிந்த உளுந்து வாசனை வந்தவுடன் அதையும் எடுத்து வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து, அதே பாத்திரத்தில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் பெரிய மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பெருங்காயப்பொடி, புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து திரிக்கவும். பொடி நரநரவென்று இருக்க வேண்டும். ரொம்ப பொடியாகிவிடக்கூடாது. அவ்வளவுதான், சுவையான, மனமான எள்ளு பொடி தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சரியான தேர்வு. இந்த எள்ளு பொடியை அப்படியே தொட்டு சாப்பிடலாம். அல்லது எள்ளு பொடியுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கிளறி, தொட்டு சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.