நல்ல பழக்கவழக்கம் 
சிறப்பு செய்திகள்

வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் சிறிய பழக்கங்கள்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுதல் உண்மையான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது.

வாழ்க்கையில் அன்றாடம் நாம் கடைப்பிடிக்கும் சிறிய பழக்கவழக்கம்கூட நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் மன நிம்மதியையும் ஏற்படுத்தும்.

பழக்கவழக்கம்மாற்றங்கள்
காபி- டீ பருகுவதற்கு முன் தண்ணீர் குடித்தல்உடலின் நீர்ச்சத்து மற்றும் ஆற்றலை மீட்டெடுக்கிறது.
இன்று இரவே நாளைய திட்டத்தை தீர்மானித்தல்மறுநாள் காலையில் மன அழுத்தத்தை குறைக்கிறது.
தேவையற்ற சிந்தனைகளை கட்டுப்படுத்துதல்மனக்குழப்பம் ஏற்படாமல் தடுக்கும்.
காலையில் எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துதல்ஒழுக்கத்தையும் புத்துணர்ச்சியான தொடக்கத்தையும் குறிக்கிறது.
மெதுவாக உணவருந்துதல்குடல் ஆரோக்கியத்தை காக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.
சிறிய தொகையை சேமித்தல்திட்டமிட்டு செலவிட தூண்டும்.
தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்தல்மனநிலையை மாற்றும். செரிமானம் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்தும்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுதல்உண்மையான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது.
அதிகாலையில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுதல்ஹார்மோன்கள் மற்றும் தூக்கச் சுழற்சியை சமநிலைப் படுத்துகிறது.
வாசிப்பு பழக்கம்- தினமும் 5 பக்கங்கள் வாசித்தல்அறிவும் சேர்ந்து வளரும்.
உணவருந்தும்போது கைப்பேசியை தவிர்த்தல்ஜீரணத்தையும் விழிப்புணர்வையும் மேம்படுத்தும்.
தினமும் பயன்படுத்தும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்அமைதியான சூழல் நிலவும். மனமும் அமைதியாகும்.
கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு சிறிது இடைவேளை எடுத்தல்உறவுகளையும் மன ஆற்றலையும் காக்கும்.
உறங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்தல்நல்ல தூக்கத்தை தரும். உடல் வலியை போக்கும்.
செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தல்மனம் திருப்தி அடையும்.