சிறப்பு செய்திகள்

சண்டே ஸ்பெஷல்: சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில், அசைவ வகைகளில் வித்தியாசமான, சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:-

சிக்கன் - ½ கிலோ (எலும்பு நீக்கியது)

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்

மிளகு பொடி - ¼ டீஸ்பூன்

உப்பு - 2½ டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 300 மில்லி

வெந்தயம் - ½ டீஸ்பூன்

கடுகு - ½ டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பட்டை - 2

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

நட்சத்திர சோம்பு - 1

கொத்தமல்லி - 2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

கடுகு - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி - 2 டீஸ்பூன் (சிறியதாக வெட்டியது)

பூண்டு - 2 டீஸ்பூன் (சிறியதாக வெட்டியது)

கறிவேப்பிலை - 2 கொத்து

எலுமிச்சை பழம் - 1

செய்முறை:-

முதலில் எலும்பு இல்லாத சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மிளகு பொடி, 1 டீஸ்பூன் உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், அரை மணி நேரம் ஊறவிடவும்.

அடுத்து, கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைக்கவும். அதில், நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும் சிக்கன் துண்டுகளை ஒரே நேரத்தில் போட்டு பொறிக்கவும். சிக்கன் பொன்னிறமாகும் வரை வேகவிடவும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதன்பின்னர், ஊறுகாய்க்கான மசாலா தயாரிக்க வேண்டும்.

அதற்கு, கேஸ் அடுப்பில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, அதில், வெந்தயம், கடுகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். அதேபோல், பட்டை, ஏலக்காய், கிராம்பு, நட்சத்திர சோம்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கறிந்துவிடாமல் வறுக்கவும். வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்சி ஜாரில் எடுத்து, பவுடராக திரிக்கவும். பிறகு அத்துடன் காஷ்மீரி மிளகாய் பொடி சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

அடுத்து ஒரு வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில், சிக்கன் பொறிக்க பயன்படுத்திய நல்லெண்ணெயை அரை கப் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் தாளிக்க சிறிதளவு கடுகு, காய்ந்த மிளகாய், சிறியதாக வெட்டிவைத்த இஞ்சி - பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.

பச்சை வாசனை போனவுடன் அடுப்பில் தீயை குறைத்து, திரித்து வைத்த மசாலா பொடியை சேர்த்து கிளறவும். அத்துடன் 1½ டீஸ்பூன் உப்பை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு பொறித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு, கடைசியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவையான சிக்கன் ஊறுகாய் ரெடி. இந்த சிக்கன் ஊறுகாயை வெளியில் வைத்தால் 1 வாரமும், பிரிட்ஜில் வைத்தால் 1 முதல் 3 மாதம் வரையும் கெடாமல் இருக்கும்.

SCROLL FOR NEXT