கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - ¼ டீஸ்பூன்
உளுந்து - ½ டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
சோம்பு - ¾ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 3 பல் (சிறிதாக வெட்டியது)
சின்ன வெங்காயம் - 15 (வெட்டிவைத்தது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
தக்காளி - 3 (பெரியது)
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ¼ கப் (துருவியது)
சீரகம் - ½ டீஸ்பூன்
முதலில் கேஸ் அடுப்பை ஆன் செய்து, அதில் வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து கிளறவும். தொடர்ந்து, பட்டை, கிராம்பு, ½ டீஸ்பூன் சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெட்டிவைத்த பூண்டு பல்லை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
சின்ன வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். தொடர்ந்து வெட்டிவைத்த தக்காளியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறவும். தக்காளியை சிறிது நேரம் வேகவிடவும்.
மற்றொரு பக்கம் துருவிய தேங்காயை மிக்சி ஜாரில் எடுத்து, அத்துடன் சீரகம், ¼ டீஸ்பூன் சோம்புவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
வெந்து கொண்டிருக்கும் தக்காளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும்போது அரைத்து வைத்த தேங்காயை சேர்க்கவும். 3 முதல் 5 நிமிடங்கள் வேகவிடவும். அடுத்து மல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான தக்காளி குழம்பு ரெடி.