சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவில் அழிந்து போன ஸ்டெகோடான் யானை இனம்

இந்தியாவில் ஸ்டெகோடான் யானை இனத்தின் அழிவு சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் ஸ்டெகோடான் யானை இனத்தின் அழிவு சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஸ்டெகோடான் நமாடிகஸ்

இன்று நாம் காணும் யானையைவிட மிகப்பெரிய உருவமும், வளைந்து நீண்ட தந்தங்கள் மற்றும் பெரிய கடைவாய் பற்களைக் கொண்ட யானைகள் இந்த நிலத்தில் வாழ்ந்து வலம் வந்துள்ளன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தின் காடுகள், புல்வெளிகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் வாழ்ந்த இந்த யானைகள் 'ஸ்டெகோடான் நமாடிகஸ்' என்ற உயிரியல் பிரிவை சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புதைபடிவங்கள்

இந்திய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகள் ஆகிய இரண்டுக்கும் உடல் மற்றும் தந்தங்கள் அமைப்பில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதே போல், ஸ்டெகோடான் யானைகளின் உடல் அமைப்பு, பற்களின் வடிவம், தந்தங்கள் போன்றவற்றில் தற்போது காணப்படும் யானைகளை போல் அல்லாமல் பல வேறுபாடுகளை கொண்டிருந்தன. இந்த வகை யானையின் கடைவாய் பற்கள் கூரை போன்ற முகடு அமைப்பில் இருந்ததாக புதைபடிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஸ்டெகோடான் யானை இனத்தின் அழிவு

நர்மதை ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் ஸ்டெகோடான் யானையின் புதைபடிவங்கள் கிடைத்தது என்றும் தகவல்கள் உள்ளன. இந்தியாவில் இந்த யானை இனத்தின் அழிவு, சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் கருத்து

பருவநிலை மாற்றம், காடுகள் மற்றும் புல்வெளிகளில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்கள், உணவு மற்றும் வாழிடங்கள் பற்றாக்குறை, மனிதர்களின் வேட்டை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களால் இந்த வகை யானைகள் அழிவை சந்தித்து இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல லட்சம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் தும்பிக்கை கொண்ட ஏராளமான விலங்கு இனங்கள் தோன்றி வாழ்ந்து அழிந்துள்ளன. ஸ்டெகோடான் யைானகள் அவற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இனமாகும்.

SCROLL FOR NEXT