சிறப்புக் கட்டுரைகள்

சண்டே ஸ்பெஷல்: கடலை மாவு ஆம்லெட் செய்வது எப்படி?

பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் இந்த வாரம் கடலை மாவு ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

சண்டே ஸ்பெஷலில், பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் இந்த வாரம் கடலை மாவு ஆம்லெட் செய்வது எப்படி என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப்

முட்டை - 3

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2 (பொடியாக வெட்டியது)

பெரிய வெங்காயம் - 1 கப் (சிறியதாக வெட்டியது)

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் பொடி - சிறிதளவு

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

முதலில் பாத்திரம் ஒன்றில் கடலை மாவை எடுத்து, அத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டி விழாத அளவுக்கு கரைத்துக்கொள்ளவும். அதாவது, பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

அடுத்து, மற்றொரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். அதை அப்படியே கடலை மாவு கலவையுடன் சேர்க்கவும். அதன்பிறகு, வெட்டிவைத்த பச்சை மிளகாய், வெட்டிவைத்த பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து, கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, நடுவில் சற்று குழியுள்ள தோசைக்கல்லை வைக்கவும். அதன் நடுவே சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடாகியதும் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்த கடலை மாவு - முட்டை கலவையை சிறிதளவு ஊற்றவும். நன்கு பொரிந்து வந்தவுடன் அதை மாற்றிப்போடவும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் அதை எடுக்கவும். இப்படியே 5 ஆம்லெட் வரை போடலாம். சுவையான கடலை மாவு ஆம்லெட் ரெடி.

SCROLL FOR NEXT