சிறப்புக் கட்டுரைகள்

சண்டே ஸ்பெஷல்: தித்திப்பான மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில், தித்திப்பான மாங்காய் பச்சடி செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

மாங்காய் துண்டுகள் - 1 கப் (தோல் நீக்கியது)

பச்சை மிளகாய் - 1

அச்சு வெல்லம் - 1 கப்

உப்பு - சிறிதளவு (1 டீஸ்பூனில் 8-ல் ஒரு பங்கு)

மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்

மிளகாய் பொடி - ½ டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

முதலில் கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். அதில் மாங்காய் துண்டுகள் மற்றும் பச்சை மிளகாயை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மாங்காய் நன்கு வெந்தவுடன் அத்துடன் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

அடுப்பில் தீயை குறைத்துக்கொள்ளவும். தொடர்ந்து, பொடியாக நொறுக்கிவைத்த அச்சு வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும். நன்கு அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிவிடவும். சுவையான தித்திப்பான மாங்காய் பச்சடி ரெடி.