* ஏ.பி.எல். அப்பல்லோ டியூப்ஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறி உள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.2,370-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.2,110-ல் முடிவுற்றது. கடந்த புதன்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 0.41 சதவீத உயர்வாகும்.
* ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் பங்குகளை வாங்கலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர் கால இலக்கை இந்நிறுவனம் ரூ.57-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.41.85-ல் நிலைகொண்டது. இது முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட் டிலும் 1.70 சதவீத ஏற்றமாகும்.
* சுந்தரம் பைனான்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,900-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.83 சதவீதம் உயர்ந்து ரூ.1,649.65-ஆக இருந்தது.
* சாத்பாவ் என்ஜினீயரிங் பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என எஸ்.பீ.ஐ. கேப் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் அந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.114-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.43 சதவீதம் உயர்ந்து ரூ.81.75-ல் முடிவுற்றது.
* சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என சி.டீ. ஈக்விசர்ச் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,615-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.1,388.30-ஆக இருந்தது. கடந்த புதன்கிழமை இறுதி நிலவரத்தை விட இது 0.67 சதவீத சரிவாகும்.
நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.