காம்பாக்ட் எஸ்.யு.வி. ரகமான எக்ஸ்.யு.வி 300 தற்போது டபிள்யூ6. ஏ.எம்.டி. என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு சிலிண்டர், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டது. இது 117 ஹெச்.பி. திறன், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. இந்த மாடலில் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷனுக்காக மரேலி நிறுவனத்தின் தொழில்நுட்பம் பெறப்பட்டுள்ளது.
இந்த மாடலில் பாதுகாப்பு அம்சமாக இ.எஸ்.சி. (எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம்) மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளது. முன்பகுதியில் 2 ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., சீட் பெல்ட் ரிமைண்டர், வேகக்கட்டுப்பாட்டு கருவி, பார்க்கிங் சென்சார் ஆகிய வசதிகள் உள்ளன. இது தவிர ரூப் ரெயில், பின்புற ஸ்பாயிலர், ஸ்டீரிங் மீதுவைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அமைப்பு, 7 அங்குல தொடு திரை, நான்கு ஸ்பீக்கர்கள், ரிமோட் லாக்கிங் வசதி கொண்டது.
இந்த மாடலானது ஏற்கனவே சந்தையில் உள்ள மாருதி சுஸுகி விடாரா பிரீஸா, டாடா நெக்ஸான் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.