செய்திகள்

குஜராத்: வதோதராவில் கனமழை, விமான போக்குவரத்து பாதிப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், விமான நிலையம் மூடப்பட்டது.

வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. 12 மணி நேரங்களில் 442 மி.மீட்டர் மழை பெய்தது. பலத்த மழையால், நகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது.

ஆஜ்வா நதியிலும் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால், வதோதரா விமான நிலையம் மூடப்பட்டது. சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. மழை தொடர்பான சம்பவங்களால் இதுவரை 6 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT