தமிழக செய்திகள்

பணகுடியில் 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஸ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராதாபுரத்தை சேர்ந்த நாராயணபெருமாள் (வயது 27), வடக்கன்குளத்தை சேர்ந்த சஞ்சய்(19) ஆகிய 2 பேரும் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்:

இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நாராயணபெருமாள், சஞ்சய் ஆகிய 2 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.