தமிழக செய்திகள்

10 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்-டாப் வழங்கப்படும் - அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உயர்கல்வித்துறை தயாராக உள்ளது.

நெல்லை,

10 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்-டாப் வழங்கப்பட இருப்பதாக நெல்லையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அரசு கல்லூரி மற்றும் உதவி பெறும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆனந்த்மோகன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்துகொண்டு மாணவர்கள், பேராசிரியர்களிடம் கலந்துரையாடினார்.

மாணவர்களுக்கு லேப்-டாப்

இதையடுத்து 15 மாணவர்களுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கடன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "இதற்கு முன்னர் எனக்கு வீட்டுக் கடன் இருந்ததை காரணம் காட்டி, கல்விக்கடன் தர மறுத்துவிட்டார்கள். இதனால் என் பிள்ளையை கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தேன். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உயர்கல்வித்துறை தயாராக உள்ளது. விரைவில் 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் லேப்-டாப் வழங்கப்பட உள்ளது” என்றார்.

துணை வேந்தர் நியமனம்

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஆண்டுகளில் கவர்னருக்கும். முதல்-அமைச்சருக்கும். இடையே மோதல் போக்கு நிலவியது. தற்போது அந்த நிலை இல்லை. துணைவேந்தர்கள் நியமனம் நீதிமன்ற வழக்குகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண கொள்கையை அரசு விரைவில் நிறைவேற்றும். அரசு கல்லூரிகளில் 2,700 பேராசிரியர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கப்படுவார்கள். மீதமுள்ள 9 ஆயிரம் காலிப்பணியிடங்கள் 2 ஆண்டுகளுக்குள் நிரப்பப்படும்.

59 ஆண்டுகளுக்குப் பிறகு பல தலைவர்களின் போராட்டங்களுக்கும் நீண்டகாலக் காத்திருப்புக்கும் கிடைத்த பலனாக முதல்-அமைச்சர் விஜய், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடைபெற்று வருகிறது. காமராஜர் பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கூறினார்.

SCROLL FOR NEXT