தமிழக செய்திகள்

ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு! சென்னையில் நாளை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில், 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மளிகைப் பொருட்கள் தொகுப்பு

தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.200-க்கு விற்பனை

இந்தத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகிய 10 பொருட்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பொருட்கள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கான மளிகைப் பொருட்களை பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கிப் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT