சென்னை,
தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
பாலநாகதேவி - சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமனம்.
அபின் தினேஷ் மொடக் - சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.
வித்யா ஜெயந்த் குல்கர்னி - சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.
எம். ராமமூர்த்தி - சென்னை சி.ஐ.டி. ‘கியூ’ பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
பி.கே. அரவிந்த் - சென்னை சிறப்பு பிரிவு சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர்-1 ஆக நியமனம்.
அர்பிதா ராஜ்புத் - சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக நியமனம்.
ஐ. ஈஸ்வரன் - சென்னை தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
எஸ்.ஆர். செந்தில்குமார் - நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
வி. சரவணகுமார் - சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
டி. ரமேஷ் பாபு - திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக நியமனம்.