தமிழக செய்திகள்

வால்பாறையில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி - நயினார் நாகேந்திரன் இரங்கல்

இம்மீளாத் துயரத்தைக் கடந்துவர இறைவன் அவர்களுக்குத் துணை நிற்கட்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கோவை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை மலைப்பாதையில் சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த மன வேதனையளிக்கிறது.

எதிர்பாரா இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மீளாத் துயரத்தைக் கடந்துவர இறைவன் அவர்களுக்குத் துணை நிற்கட்டும்! மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

SCROLL FOR NEXT