தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் இந்த ஆண்டு இதுவரை 100 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கொலை, அடிதடி வழக்குகள்

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வி.கே.புரம் டாணா பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் கார்த்திக்சங்கர்ராஜா (வயது 37) மற்றும் காளிமுத்து மகன் மாரியப்பன்(42) ஆகிய 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

இந்த நிலையில், மேற்சொன்ன 2 பேரும் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், வி.கே.புரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர், மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.

2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை 100 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 100 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT