தமிழக செய்திகள்

சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: போலீஸ் கமிஷனர் அருண் தகவல்

சென்னையில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ள 2,336 பேரில் 70 சதவீதம் பேர் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகள் குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது: சென்னையில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ள 2,336 பேரில் 70 சதவீதம் பேர் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டனர்.

சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தப்படும். தேர்தலுக்காக தற்போது வரை 56 பறக்கும் படைகள், 56 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT