தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மாணவச் செல்வங்கள் அனைவரும் எந்த தயக்கமும் இன்றி, தன்னம்பிக்கையுடன் மற்றும் உறுதியோடு தேர்வை எழுத வேண்டும்.
உங்கள் முயற்சியும் உழைப்பும் கண்டிப்பாக நல்ல பலனைத் தரும். அனைத்து மாணவர்களும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.