தமிழக செய்திகள்

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

நெல்லை மாநகரம் பெருமாள்புரம், வி.எம்.சத்திரம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம், வி.எம்.சத்திரம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே நான்கு சக்கர வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டம், செயமங்களம், ராஜசேகர் மகன் கிஷோர்குமார் (வயது 21) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர்பாண்டி(25) ஆகியோரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. விற்பனைக்காக வைத்திருந்த அந்த கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT