திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 180 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், ஒரு வாலிபரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிஸ்(எ) நவீன் (வயது 21) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் அரசால் தடை செய்யப்பட்டு மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 180 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அந்த வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபரை நீதிமன்ற காவலில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.