தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் மற்றும் போலீசார் மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களான சின்னதுரை (வயது 27), அபிஷேக்(20), திசையன்விளை பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன்(24) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன்(24) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்சொன்ன போலீசார் மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.