கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104.9° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மக்கள் இளநீர், குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 12 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 104.9° பாரன்ஹீட் (40.5° செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாண்டி பதிவான இடங்களின் விவரம் வருமாறு:-

வேலூர் - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்)

ஈரோடு - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)

நாமக்கல் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்)

திருப்பத்தூர் - 101.84° பாரன்ஹீட் (38.8° செல்சியஸ்)

கோயம்புத்தூர் - 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)

தர்மபுரி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)

மதுரை நகரம் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)

சேலம் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)

திருச்சி - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)