சென்னை,
சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய ரெயில் பாதை களில் விபத்துகளை தவிர்க்கவும், ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025-2026-ம் நிதியாண்டில் சென்னை கோட்டத்தில் 12 லெவல் கிராசிங் கேட்டுகள் நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக இந்த இடங்களில் சுரங்கப்பா தைகள், மேம்பாலங்கள் மற்றும் கீழ்ப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் தாம்பரம் இடையே இருந்த 27-வது எண் கொண்ட ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, அங்கு கீழ்ப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதேபோல், வாலாஜா ரோடு, காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 7 சுரங்கப்பாதை கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒத்திவாக்கம், விண்ணமங்கலம் மற்றும் சித்தேரி ஆகிய இடங்களில் 3 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
ரெயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டதன் மூலம், தண்டவாளங்களை கடக்கும்போது ஏற்படும் விபத்து அபாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ரெயில்கள் குறித்த நேரத்திற்கு இயக்கப்படவும், அவற்றின் வேகத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள மற்ற லெவல் கிராசிங் கேட்டுகளையும் படிப்படியாக அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.