கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவர்கள் விடுதலை

12 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில் 12 மீனவர்களும் ஒரு மாத சிறை தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் 12 மீனவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவசரகால கடவு சீட்டுகள் வழங்கி விமான மூலம் கொழும்பில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையம் வந்த 12 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.