இருளில் மூழ்கிய கிராமங்கள்
உடன்குடி துணைமின்நிலையம் மூலம் குலசேகரன்பட்டினம் பீடரில் இருந்து ஞானியார்குடியிருப்பு, மெய்யூர், அன்பின்நகரம், கந்தபுரம், நேசபுரம், சின்னமாட விளை, அண்ணாநகர், இராமசாமிபுரம், வேதகோட்டைவிளை, ஞானியார்குடியி ருப்பு, ராமசாமிதர்மபுரம், பிறைகுடியிருப்பு மின்சார விநியோகம் வழங்கபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு இந்த கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. நீண்டநேரமாக மின்சாரம் வினியோகம் செய்யப்ப டாத நிலையில், கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அப்போது அந்த அதிகாரிகள், சாத்தான்குளம் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்வினி யோக பிரச்சினையால், இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் விரை வில் சரியாகிவிடம் என கூறியுள்ளனர். ஆனால் நேற்று இரவிலும் மின்சாரம் வினியோகம் செய்யப்படாததால், 12 கிராமங்களும் இருளில் மூழ்கின.
இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.மின்வாரிய அதிகாரிகளை கிராம மக்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இரவு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக மின்வினியோகம் செய்யுமாறும் கோஷம் எழுப்பினர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட் டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளும் மின்வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.