தமிழக செய்திகள்

முதல் இரண்டு மணி நேரத்தில் 13 தொகுதிகள் 20 சதவீத வாக்குகளை கடந்துள்ளன

வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, இன்று (ஏப்ரல் 23-ந்தேதி) ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த (2021) சட்டமன்ற தேர்தலைவிட 3.89 சதவீதம் அதிகம் ஆகும். முதல் இரண்டு மணி நேரத்தில் 13 தொகுதிகள் 20 சதவீத வாக்குகளை கடந்துள்ளன. ஆத்தூர் 20.26 சதவீதம், அவிநாசி 21.51 சதவீதம், பவானி 20.11 சதவீதம், ஈரோடு கிழக்கு 21.47 சதவீதம்,

காங்கேயம் 20.97 சதவீதம், கவுண்டம்பாளையம் 20.26 சதவீதம், குமாரபாளையம் 22.46 சதவீதம், மொடக்குறிச்சி 20.20 சதவீதம், பல்லடம் 21.22 சதவீதம், சங்ககிரி 20.63 சதவீதம், திருச்செங்கோடு 21.04 சதவீதம், திருப்பூர் வடக்கு 20.15 சதவீதம், திருப்பூர் தெற்கு 21.08 சதவீதம்,

திருப்பூர் -20.38 சதவீதம்

நாமக்கல் -19.83 சதவீதம்

ஈரோடு- 19.55 சதவீதம்

சேலம் - 19.46 சதவீதம்

கரூர் - 18.78 சதவீதம்

காஞ்சிபுரம் -18.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.