தமிழக செய்திகள்

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர். ஸ்டாலின், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல் அதிகாரிகள் பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவின்படி, அதிகாரிகளின் புதிய பொறுப்புகள் வருமாறு:

பணியிட மாற்றம்

கே.ஜோஷி நிர்மல் குமார்: சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஜி.பாபு, ஐ.பி.எஸ்.: சென்னை பெருநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக இருந்த இவர், சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் சந்தோஷ் ஹதிமானி, ஐ.பி.எஸ்.: சேலம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு கூட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.தேவராணி, ஐ.பி.எஸ்.: லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், சேலம் சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வி.பத்ரி நாராயணன், ஐ.பி.எஸ்.: கோயம்புத்தூர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த இவர், சென்னை அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ஏ.சி.கார்த்திகேயன்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.மதிவாணன்: சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த இவர், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வி.ஆர்.சீனிவாசன், ஐ.பி.எஸ்.: சென்னை பரங்கிமலை துணை ஆணையராக இருந்த இவர், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

கே.ஸ்டாலின்: சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.யாக இருந்த இவர், சென்னை சி.பி.சி.ஐ.டி. தெற்கு மண்டல எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.சுந்தரவடிவேல், ஐ.பி.எஸ்.: சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருந்த இவர், நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

டாக்டர் வி.பாஸ்கரன், ஐ.பி.எஸ்.: சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த இவர், சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கித் சிங், ஐ.பி.எஸ்.: சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த இவர், சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

டாக்டர் ஆர்.ஸ்டாலின், ஐ.பி.எஸ்.: காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT