தமிழக செய்திகள்

நெல்லையில் 1.3 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லை மாவட்டம், மானூர் அருகே பல்லிகோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பல்லிகோட்டை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த, பல்லிக்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார் (வயது 21), ரமேஷ்(22) மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த முத்துராமன்(24) ஆகிய 3 பேரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பிரேம்குமார், ரமேஷ், முத்துராமன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.