தமிழக செய்திகள்

வண்டலூர் பூங்காவிற்கு வந்த 13 வயது புலி

கோக்கால் பகுதியில் கூண்டில் சிக்கிய, இரண்டாவது புலியை வனத்துறையினர் மீட்டு, வண்டலுருக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னை,

நீலகிரி மாவட்டம், கூடலுார் கோக்கால் லாரஸ்டன் பகுதியில், ஆக., 9ம் தேதி பாலகிருஷ்ணன், 60, மற்றும் 21ம் தேதி ரவிச்சந்திரன், 56, ஆகியோரை புலி தாக்கி கொன்றது.

இதையடுத்து அப்பகுதியில், 13 கூண்டுகள் வைத்து, 200க்கும் மேட்பட்ட தானியங்கி கேமராக்கள் பொருத்தி, புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கடந்த மாதம், 18ம் தேதி, கூண்டில் புலி சிக்கியது. அதனை, சென்னை வண்டலுார் வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதே பகுதியில், காயங்களுடன் உலா வந்த மற்றொரு புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இரு நாட்களுக்கு முன், தனியார் இடத்தில் வைக்கப்பட்ட, 'சி.சி.டி.வி' கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவானது. சில்வர் கிளவுட் அருகே வைக்கப்பட்ட கூண்டில், நேற்று அதிகாலை புலி சிக்கியது.

இந்தநிலையில், கூடலூர் வனக்கோட்டத்தில் பிடிக்கப்பட்ட சுமார் 13 வயதுடைய ஆண் புலி ஒன்று, தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுவாழ்வு மற்றும் தீவிர கண்காணிப்பிற்காக இன்று வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் (AAZP) மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT